ரபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்- 10 பாலஸ்தீனிய வீரர்கள் உயிரிழப்பு

தாக்குதல் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.;

Update:2024-06-20 13:13 IST
ரபாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்- 10 பாலஸ்தீனிய வீரர்கள் உயிரிழப்பு

கோப்புப்படம் 

ரபா,

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரபா நகரத்தில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். எனினும், ரபாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் பலியாகின்றனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ரபா நகரின் கிழக்கு பகுதியில் வணிகப் பொருட்களைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் பணியாளர்களின் குழுவை நோக்கி ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் லாரிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த 10 பாலஸ்தீன ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும். எனினும், இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

 

Tags:    

மேலும் செய்திகள்