அமெரிக்காவில் இருந்து தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் திடீர் ஆலோசனை

அமெரிக்காவில் இருந்து தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Update: 2024-09-08 17:55 GMT

வாஷிங்டன்,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக எத்தகைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பணிகளுக்காக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழுவினர் கட்சி நிர்வாகிகளுடன் கருத்துகளை கேட்டு வருகிறார்கள்.

அமெரிக்கா சென்றாலும் கட்சி பணிகளையும், ஆட்சி பணிகளையும் ஒருங்கிணைப்பேன் என ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் ஒருங்கிணைப்பு குழுவினருடன் முதல்-அமைச்சர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Full View


Tags:    

மேலும் செய்திகள்