இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

கடலூர் மாநகராட்சியில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடித்து விடுவதாக மிரட்டி கடப்பாரையுடன் வரி வசூலில் ஈடுபட்ட இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
வரும் 28-ம் தேதி விஜய் தலைமையில் நடைபெறவுள்ள த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு, குழுக்கள் அமைப்பு
அமைக்கப்பட்டுள்ள வரவேற்புக்குழு, தொழில்நுட்பக்குழு, ஊடக மேலாண்மைக் குழு என பல்வேறு குழுக்களில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு
செவ்வாய் கிரகத்திலும் ரோவர் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ள மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி இருப்பதாக இஸ்ரோ தகவல்
விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் பலியானார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறிய உறவினர்கள் மருத்துவமனை மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகம் தான் அதிக பயனடையும் என கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கும்படி மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஜாகீர் உசேன் மகன், தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என கூறி வீடியோ வெளியிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
துப்பாக்கியுடன் கூடிய 2 காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படி மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கடலூர், மலையடி குப்பத்தில் முந்திரி கன்று நடும் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்திய சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் உட்பட 132 நபர்கள் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் - அவிநாசி இடையே 35 கி.மீ. தூரத்திற்கு ரூ.250 கோடியில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 1,400க்கும் மேற்பட்ட சாலையோர மரங்களை வெட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களும் அடங்கும். இதனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.