அன்னவாசல் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு

அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்க்க வந்த நபர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.;

Update:2025-03-23 17:06 IST
அன்னவாசல் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்க்க வந்த நபர் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அன்னவாசலில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த மாரிமுத்து என்பவர் மாடு முட்டியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்