இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - வெளியான தகவல்
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
இமாச்சல பிரதேச சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பசும்பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 6 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதன் மூலம், பசும்பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை லிட்டருக்கு ரூ.51 ஆகவும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.61 ஆகவும் இருக்கும்.
கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது. இதற்கு போராட தமிழக பாஜக தயாரா? டெல்லி பாணி தமிழ்நாட்டில் எடுபடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தீப்பற்றிய வைக்கோல் போர்.. 4 குழந்தைகள் பலி
ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா மாவட்டம், ஜெகன்னாத்பூர் அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் சுமார் 5 வயதுடையவர்கள். வைக்கோல் போரில் தீப்பிடித்தபோது குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னையில் நாளை (18.03.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ரெட்டில்ஸ்: தர்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிரங்கவூர், புது நகர் மூன்றாவது தெரு மற்றும் ஐந்தாவது தெரு. மல்லிமநகர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கையால், அமெரிக்காவுக்குள் நுழைய பாகிஸ்தான், ரஷியா உள்பட 43 நாடுகள் பயண தடையை எதிர்கொள்ளும். இதன்படி, ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா, ஏமன் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளன.
இந்நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்படும். ஆரஞ்சு பட்டியலில் உள்ள நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் மற்றும் ரஷியா இடம் பெற்றுள்ளன. மியான்மர், பெலாரஸ், ஹைதி, லாவோஸ், எரித்ரியா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளன.
இதனால், வர்த்தக பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். ஆனால், புலம்பெயர்வோர் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான விசா விண்ணப்பிப்போர் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த பட்டியலில் உள்ள நபர்கள், விசா பெற தனிநபர் நேர்காணல்களை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.
இதுதவிரவும், அங்கோலா, காங்கோ, வனுவாட்டு, காம்பியா, செயின்ட் லூசியா உள்ளிட்ட 22 நாடுகள் மஞ்சள் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன.
சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் பதிவாகி இருந்தன. இதனால், தீர்மானம் தோல்வி என அறிவிக்கப்பட்டது.