டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கையால்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025

டிரம்ப் அரசின் புதிய நடவடிக்கையால், அமெரிக்காவுக்குள் நுழைய பாகிஸ்தான், ரஷியா உள்பட 43 நாடுகள் பயண தடையை எதிர்கொள்ளும். இதன்படி, ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா, ஏமன் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளன.

இந்நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்படும். ஆரஞ்சு பட்டியலில் உள்ள நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் மற்றும் ரஷியா இடம் பெற்றுள்ளன. மியான்மர், பெலாரஸ், ​​ஹைதி, லாவோஸ், எரித்ரியா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளன.

இதனால், வர்த்தக பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். ஆனால், புலம்பெயர்வோர் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான விசா விண்ணப்பிப்போர் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த பட்டியலில் உள்ள நபர்கள், விசா பெற தனிநபர் நேர்காணல்களை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.

இதுதவிரவும், அங்கோலா, காங்கோ, வனுவாட்டு, காம்பியா, செயின்ட் லூசியா உள்ளிட்ட 22 நாடுகள் மஞ்சள் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன.

Update: 2025-03-17 07:24 GMT

Linked news

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-03-2025