இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024

Update: 2024-12-16 03:41 GMT
Live Updates - Page 5
2024-12-16 04:06 GMT

பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா திணறல்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

 

2024-12-16 03:58 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா தடுத்து நிறுத்தம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வழிபாடு நடத்தினார். அப்போது கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

2024-12-16 03:42 GMT

  •  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்
  • வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம்
  • அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Tags:    

மேலும் செய்திகள்