கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா உயிரிழப்பு
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஷா உயிரிழந்தார்.
கோவை,
1998-ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அல்-உம்மா தலைவர் பாஷா (72 வயது) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.