காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
மருத்துவமனை சிகிச்சை பெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) இன்று காலை 10:12 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நாளை தொண்டர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவு தொடர்பாக, மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் 13 நவம்பர் 2024 அன்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம்: திருச்செந்தூருக்கு 2 நாட்கள் செல்ல வேண்டாம் - கலெக்டர் அறிவுறுத்தல்
திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதை பக்தர்கள் 2 நாட்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்
சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு
வரும் 17ம் தேதி தமிழ்நாட்டில் 12 முதல் 20 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மிக கனமழைக்கு (ஆரஞ்சு அலர்ட்) வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் வருகிற 16-ம்தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
நெல்லையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அத்துடன், தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வங்கக்கடலில் உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.