உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் வருகிற 16-ம்தேதி தாக்கல் மக்களவையில் செய்ய உள்ளார்.
நெல்லையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அத்துடன், தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வங்கக்கடலில் உருவானது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
கோடியக்கரை 15 செ.மீ.
வேதாரண்யம் 7 செ.மீ.
திருக்குவளை 6.6 செ.மீ.
தலைஞாயிறு 6.2 செ.மீ.
திருப்பூண்டி 6 செ.மீ,
வேளாங்கண்ணி 5.4 செ.மீ.
நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
வி.கே.புரம் - 18 செ.மீ.
இட்டமொழி - 11 செ.மீ.
ஊத்து - 8 செ.மீ.
திசையன்விளை - 7 செ.மீ.
குட்டம் - 6 செ.மீ.
வள்ளியூர் - 5 செ.மீ.
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக கடந்த இரு தினங்களாக பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை எதிரொலியாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
* திருநெல்வேலி,
* தூத்துக்குடி,
* தென்காசி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
* தேனி
* விழுப்புரம்
* திருச்சி
* சிவகங்கை