தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்: சிரோமணி அகாலி தளம் பங்கேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பஞ்சாப் மாநில கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.;

சென்னை,
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 58 கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி தொகுதி மறுவரையறை காரணமாக பாதிக்கப்படும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் வரும் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதையடுத்து தென் மாநிலங்கள் உள்ளிட்ட பாதிக்கப்படும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதையடுத்து அதில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பஞ்சாப் மாநில கட்சியான சிரோமணி அகாலி தளம் சார்பில் முன்னாள் எம்.பி. பல்விந்தர் சிங், முன்னாள் மந்திரி தல்ஜித் சிங் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.