திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு செல்லமாட்டார்: அமைச்சர் ரகுபதி

விஜயை கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2024-11-08 13:15 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி எப்போதும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர்; அவருடன் கூட்டணி போவதற்கு யாரும் தயாராக இல்லை. தேமுதிக மட்டும்தான் உள்ளது; அவர்கள் கழன்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை தனி மரம் தோப்பாகாது; எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது.

விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு நிச்சயம் செல்லமாட்டார். 2026 தேர்தலில் இதே நிலையில் கூட்டணி நீடிக்கும். திமுக மீண்டும் வெற்றிபெற்று 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார். கூட்டணியை பிரிக்க முயலும் சிலரின் சதி வேலைகளில் நாங்கள் சிக்க மாட்டோம்.

எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் நட்போடும் பாசத்தோடும் உள்ளவர்கள்; ஆதலால் சதி வேலைகளில் சிக்கமாட்டார்கள். 2026 தேர்தலில் இதே நிலையில் திமுக கூட்டணி நீடிக்கும். திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார்; எந்த வகையிலும் 2026 களம் மாறாது. கூட்டணி ஆட்சி அமையும் என்ற அன்புமணியின் பகல் கனவிற்கு நாங்கள் பொறுப்பல்ல.

விஜய் கட்சி தொடங்கியதால் எங்களுக்கு பதற்றம் இல்லை; அவரை கண்டு நாங்கள் பயப்படவில்லை; எங்களுக்கு கவலையும் இல்லை. அதிமுகவிடம் ஒன்றுமே இல்லாததால் அவர்களை, விஜய் விமர்சிக்காமல் இருந்திருக்கலாம்; பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

திமுக எதைக் கண்டும் பயப்படவில்லை தேர்தல் களத்தில் நாங்கள் இறங்கிவிட்டோம். மற்றவர்கள் இன்னும் இறங்கவில்லை. பணிகளை தொடங்கி விட்டோம் நிச்சயமாக மக்களிடம் எங்களுடைய திட்டங்களை கொண்டு சென்று சேர்த்து அதன் மூலமாக வாக்குகளை பெறுவோம் அதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்