சென்னை லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயர்

சென்னை லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Update: 2024-12-26 10:12 GMT

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்டி, லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு புதிதாக பெயர் சூட்டப்பட்ட 'இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்துத் தீவு' பெயர்ப்பலகையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) 'இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்துத் தீவு' என்கிற பெயர் சூட்டி தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, லஸ் சர்ச் சாலை போக்குவரத்துத் தீவில் இன்று (26.12.2024) நடைபெற்ற விழாவில், புதிதாக பெயர் சூட்டப்பட்ட 'இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்துத் தீவு' பெயர்ப்பலகையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் மோ.சரஸ்வதி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி மற்றும் குடும்பத்தினர், ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் நடிகர் ராஜேஷ், வி.பாபு, முகமது இலியாஸ், நடிகர் கலைமாமணி பூவிலங்கு மோகன், நடிகர் தசரதி, ஒளிப்பதிவாளர் விக்ரமன், தமிழ்நாடு இயக்குநர் சங்கப் பொதுச் செயலாளர்/இயக்குநர் ம.பேரரசு, பொருளாளர் சரண், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்/தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் மங்கை அரிராஜன், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் சீனிவாசன், திரையுலகப் பிரமுகர்கள்/நடிகர்கள் எஸ்.வி.சேகர், பிரமிட் நடராஜன், அழகு, டி.வி.வரதராஜன், நாகேஷ் ஆனந்த்பாபு, நடிகை காயத்ரி ரகுராம், திரைப்பட இயக்குநர்கள் வசந்த், நாகா, கலை இயக்குநர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்