வேங்கைவயல் விவகாரம்: திமுக அரசு தலைகுனிய வேண்டும் - ராமதாஸ்

வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Update: 2024-12-26 08:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு கிடைக்காத நீதிக்காக திமுக அரசு தலைகுனிய வேண்டும். குற்றவாளி யார் என்றுகூட காவல்துறையால் துப்பு துலக்க முடியவில்லை என்பதை ஏற்க முடியாது. இதே நாள் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இச்சம்பவம் நடைபெற்றது.

வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டும் இன்னமும் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. இதில் குற்றவாளி யார் என ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அநீதி நிகழ்த்தப்படுகிறது. இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

வேங்கைவயல் வழக்கு விசாரணையை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். திமுக அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை. மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக வெட்கி தலை குனியவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்