இன்றைய செய்திகள் சில வரிகளில்..

Update:2024-12-09 09:07 IST
Live Updates - Page 3
2024-12-09 05:06 GMT

 “மதுரை புறநகர் பகுதியில் ₹2,000 கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ₹1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்”-

மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

2024-12-09 05:02 GMT

கிளாம்பாக்கத்தில் அரசு விரைவு பேருந்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். பயணிகள் வரும் வழியை பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம் மூடியதாக அரசு பேருந்து ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வழி மூடப்பட்டதால் தனியார் ஆம்னி பஸ்களை நாடி பயணிகள் செல்வதாகவும் அரசு பேருந்துகளுக்கு வருவது குறைந்து இருப்பதாகவும் கூறி பேருந்து ஊழியர்கள் இந்த  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

2024-12-09 04:53 GMT

சட்டப்பேரவையில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் 3-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், அதை தொடர்ந்து 3-வது இருக்கையில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

2024-12-09 04:43 GMT

ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தைப் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், திரையரங்கு உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024-12-09 04:34 GMT

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

2024-12-09 04:12 GMT

டெல்லியில் இன்று 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு வந்த மாணவர்களை உடனடியாக திருப்பி அனுப்பிய பள்ளி நிர்வாகங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தன. மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால், வெடிகுண்டு மிரட்டல் எங்கு இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

2024-12-09 04:07 GMT

தமிழக சட்டசபை கூடியது: மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள், முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது.

2024-12-09 03:53 GMT

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சந்திக்க உள்ளார். பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விசிக சார்பில் ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என திருமாவளவன் அறிவித்து இருந்தார். இந்த நிவாரண நிதியை அளிக்க திருமாவளவன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, அரசியலில் புயலை கிளப்பியுள்ள ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக ஸ்டாலினிடம் திருமாவளவன் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-12-09 03:41 GMT

மதுரையில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

2024-12-09 03:40 GMT

 தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்