உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மே 9-ம் தேதி கலவரத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து நடந்த இந்த கலவரத்தில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் ராணுவ நிலைகள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறி ராணுவத்திடம் 103 பேர் ஒப்படைக்கப்பட்டனர். இதில் விசாரணை முடிந்த வழக்குகளில் ராணுவ கோர்ட்டு தீர்ப்பை வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரான தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 10,109 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 12-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல 8,127 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை
வயநாடு நிலச்சரிவில் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும், அதற்குபின் நடந்த விபத்தில் தனது காதலன் ஜென்சனையும் இழந்து தவித்த ஸ்ருதி என்ற பெண்ணுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டது. வருவாய்த்துறையில் கிளெர்க்-ஆக அந்த பெண் பணியில் சேர்ந்தார். முதல்நாள் பணியில் சேர்ந்த இவருக்கு அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.