புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : போலீசார் உள்பட 4 பேர் பலி
புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.;
விழுப்புரம்
விழுப்புரத்தின் தலைமை காவலர் பிரபாகரன் என்பவர் விழுப்புரம்-புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதகடிப்பட்டு மேம்பாலத்தின் மீது தனது குடுபத்தினருடன் 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தார். இதே சமபயம் புதுச்சேரி- விழுப்புரம் நோக்கு 2 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். 2கார்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கார் ஓட்டுனர் மற்றும் பிரபாகரன் உயிரிழந்தனர். மற்றொரு காரில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.