கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் ஒருவர் இரவில் தங்கி இருந்தார். மதுபோதையில் இருந்த அந்த வாலிபர், திடீரென மருத்துவமனையின் மகளிர் நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்தார். அங்கு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 50வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டார். பெண்ணில் அலறல் சத்தம் கேட்டு திரண்ட நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த வாலிபர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைதுசெய்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதிஷ்(வயது 28) என்பதும், வேலை தேடி சென்னை வந்த நிலையில், அவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.