நான் முதலமைச்சராக இருக்கும் வரை, டங்க்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி அமைந்தால் நான் பொறுப்பில் இருக்க மாட்டேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
டங்க்ஸ்டனுக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.
சட்ட சபையில் காரசார வாதம்
பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை எங்களிடம் காட்டவில்லை என எடப்பாடி பழனிசாமி கேள்வி
நீங்கள் முதலமைச்சராக இருந்த போது எத்தனை கடிதங்களை அப்படி வெளியிட்டீர்கள்? என அமைச்சர் துரை முருகன் பதில்
சென்னையில் புத்தக கண்காட்சி
சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 27-ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதலஉதய நிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் புத்தக கண்காட்சியை துவக்கி வைக்கிறார்கள்.
துவக்க நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதலமைச்சர் வழங்க உள்ளார். புத்தகக் காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும் மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும்.
தமிழ்நாட்டில் அதிக லாபம் தரும் திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தை தனி போக்குவரத்துக் கழகமாக அறிவிக்க வேண்டும் - கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கோரிக்கை
"போக்குவரத்து கழக நிதிநிலை போதுமானதாக இல்லை , எனவே எதிர்காலத்தில் தி.மலையை தனி போக்குவரத்து கழகமாக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்"
- அமைச்சர் சிவசங்கர் பதில்
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் போராட்டத்தால் விழுப்புரம் - சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வடக்கு தெரு, மாசிலாமணிப்பேட்டை, மேல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதானி குழும ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.