தமிழகத்தில் பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது: சசிகலா குற்றச்சாட்டு
தமிழகத்தில் பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசியல் சூழல் எப்போதும் போன்றுதான் உள்ளது. புதிதாக கட்சி தொடங்கியவர்கள் பற்றி 2026-ல் தான் தெரியும். திமுக அரசு அமைந்து 4 ஆண்டுகள் ஆகிறது. மக்களுக்கு செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை.
தமிழ்நாடு முழுவதும் கொலைகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டவிட்டது. மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் அவர்கள் ஆட்சி நன்றாக இருப்பது போன்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.