தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழில் முதலீடுகள் - கவர்னர் உரையில் தகவல்

தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழில் முதலீடுகள் வருவதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-01-06 18:26 IST

சென்னை,

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் இடம்பெற்றிருப்பதாவது:-

சட்டம் - ஒழுங்கைப் பொறுத்தவரை. சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிராக பாரபட்சமற்ற, கடுமையான அணுகுமுறையை இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தொடர் சோதனைகள், சிறப்பு போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கங்கள், விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள். மேம்படுத்தப்பட்ட எல்லை சோதனைச் சாவடிகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்த அச்சுறுத்தலைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், கணினிசார் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன புலனாய்வு முறைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கைது செய்வதில் ஆக்கப்பூர்வமான பல முயற்சிகளை தமிழ்நாடு காவல்துறை எடுத்து வருகிறது. மாநிலத்தில் அமைதி நிலவிடவும். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திடவும் அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர் காரணமாக. தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, நாட்டின் மொத்தப் பெண் தொழிற் பணியாளர்களில் 41 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நமது மாநிலத்தில் நிலவும் அமைதியான, வளர்ச்சிக்கு உகந்த சூழலால் தமிழ்நாட்டை நோக்கி புதிய தொழில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்