வேளாண்மை பட்ஜெட் 2025-26-:வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளின் விவரம்
மின்சார இணைப்பு இல்லாத ஆயிரம் விவசாயிகளுக்கு தனித்து சூரியசக்தியால் இயங்கக் கூடிய பம்புசெட்டுகள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.;

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது. 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம், நிலக்கடலை உற்பத்தியில் 3 ஆவது இடம், கரும்பு உற்பத்தியில் 2-ஆ இடம் பெற்றுள்ளது.வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்கும்.1.86 லட்சம் மின் இணைப்புகள்1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன.
- 147 லட்சம் டன் நெல் கொள்முதல் 2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வுடெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
- கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.
- கரும்பு உற்பத்தில் தமிழ்நாடு 2 ஆவது இடம் வகித்து வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
- 1000 முதல்வர் உழவர் நல சேவை மையம்முதல்வர் மருந்தகம் போன்று 1000 முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்கலுக்கு விபத்து இறப்புக்கான இழப்பீடு ரூ.1 லடச்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
- இயற்கை இறப்புக்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இறுதி சடங்கி நிதி உதவி ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- முதல்வர் மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.146 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இந்த திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது.
- மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத் திட்டம் செயல்படுத்தப்படும். 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுஉயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நெல் சாகுப்படியை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உழவர்களை அவர்களை கிராமங்களிலேயே சந்தித்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கிட உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடங்கப்படும்.
- மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த 3 லட்சம் ஏக்கப் பரப்பளவில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுவைதாளிதப் பயிர்களின் சாகுப்படியை ஊக்குவிக்கவும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள் ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
- நுண்ணீர் பாசனத் திட்டம்நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.1.166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோடைக்காலப் பயிர்த் திட்டம் கோடைக்காலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மக்களின் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்வதுடன், விவசாயிகள் வருமானத்தை உயர்த்திட ரூ.125 கோடியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் உருவாக்கப்படும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள், பிற இடுபொருள்கள் உழவர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
- 100 முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல். தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க, தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை உருவாக்கப்படும்.
- பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட ரூ.12.21 கோடியில் பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம் உருவாக்கப்படும். உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும்.
- உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம். நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களிந் சாகுபடியை ஊக்குவிக்க, மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் கொண்டுவரப்படும். ரூ.21 கோடியில் ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களின் பொருளாதாரச் சுமையினை குறைக்க திட்டம் செயல்படுத்தப்படும்.
- உயிர்ம விளைப்பொருள்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம் வழங்கப்படும். சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.53 கோடிய 44 லட்சத்தில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அமைக்கப்படும். ரூ.108 கோடியில் எண்ணெய் வித்துகள் இயக்கம்உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய ரூ.108 கோடிய 6 லட்சத்தில் எண்ணெய் வித்துகள் இயக்கம் அமைக்கப்படும்.
- மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க ரூ.40 கோடியே 27 லட்சத்தில் மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.
- 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.15.05 கோடியில் 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும். ரூ.15.05 கோடியில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு ரூ.15.05 கோடியில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும்.
- முந்திரி சாகுபடியை அதிகரிக்க முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்.
- தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் 'கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' வரும் ஆண்டில் 2338 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்