புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்

Update: 2024-11-29 04:26 GMT
Live Updates - Page 2
2024-11-29 15:34 GMT

புதுவைக்கு அருகில் புயல் கரை கடக்க வாய்ப்பு

பெஞ்சல் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை பிற்பகல் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரை கடக்கும்போது மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-11-29 15:24 GMT

ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், எண்ணூர், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

2024-11-29 14:50 GMT

பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு 

நாளை புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

2024-11-29 14:41 GMT

ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்

புயல் நாளை கரையை கடக்கும்போது கடலோர பகுதிகளில் அதிக காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை பிற்பகலில் சென்னை ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர். பகுதிகளில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.   

2024-11-29 14:36 GMT

ஐ.டி. நிறுவன பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நாளை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. 

2024-11-29 14:29 GMT

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

2024-11-29 14:23 GMT

பெஞ்சல் புயலின் வேகம் அதிகரிப்பு

சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டராக அதிகரித்து உள்ளது. 

2024-11-29 14:14 GMT

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

2024-11-29 14:03 GMT

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

2024-11-29 13:57 GMT

மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்