பட்டாசு ஆலை விபத்து: 4 பேர் மீது வழக்கு

பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .;

Update: 2025-01-04 07:28 GMT

விருதுநகர்,

விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 அறைகள் தரைமட்டமாகின.இதையடுத்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த நிலையில் வெடிவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இந்த விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .. ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன் , மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது   ,  உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

Tags:    

மேலும் செய்திகள்