விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 6 பேர் பலி
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.;
விருதுநகர்,
விருதுநகர் அருகே கோட்டையூர் பகுதியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 அறைகள் தரைமட்டமாகின.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த நிலையில் வெடிவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வேதிப்பொருட்கள் கலவையின்போது விபத்து நேர்ந்தது என்றும், விசாரணைக்கு பிறகே முழு தகவலும் தெரியவரும் என்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.