தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்த பாரதி வாழிய... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.;

Update:2024-12-11 11:39 IST

சென்னை,

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்! மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்