செய்திகள் சில வரிகளில்......

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

Update: 2024-07-05 08:30 GMT

சென்னை,

* பிரிட்டனின் புதிய பிரதமராகிறார் தொழிலாளர் கட்சியின் கீர் ஸ்டார்மர்.

* பிரிட்டன் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார். இவர் பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்பி ஆவார்.

* மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.

* ஐ.சி.சி. ஜூன் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பெயர் பட்டியலில் 2 இந்திய நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.

* ஹத்ராஸ் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

* நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - வெற்றி பெற்ற மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

* விம்பிள்டன் டென்னிஸ்: இந்தியாவின் யுகி பாம்ப்ரி இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

* டி.என்.பி.எல். கிரிக்கெட் சேலத்தில் இன்று தொடக்கம் - முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் மோதுகின்றன.

* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்