கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை முன்னிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Update: 2024-08-18 12:48 GMT


Live Updates
2024-08-18 14:41 GMT

கருணாநிதி ஒரு மாநில தலைவர் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார் - ராஜ்நாத் சிங்

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு மாநில தலைவர் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஜனநாயக கூறுகள், இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசு அமைக்கப்பட்டிருந்த பொழுது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆதரவு மிகவும் பக்கபலமாக இருந்தது” என்று அவர் கூறினார்.

2024-08-18 14:26 GMT

நாணயத்தை வெளியிட்ட பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, "கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை; துணிச்சல்மிக்கவை. இந்தியாவின் தேசிய ஆளுமை கருணாநிதி. நாட்டின் தலைசிறந்த நிர்வாகியான கருணாநிதி மத்தியில் வெற்றிகரமான கூட்டணி அரசமைய காரணமானவர். கருணாநிதியின் பொது நலத்தொண்டால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

2024-08-18 14:11 GMT

"சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன்" : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “எனது உணர்வுகளை எப்படி விவரிப்பது என்பது குறித்து சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். நாணயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, இதனை இந்தியாவே கொண்டாடி வருகிறது;

இது போன்ற எத்தனையோ சிறப்புகளுக்கும் தகுதியானவர் தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி” என்று அவர் கூறினார். 

2024-08-18 13:54 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

2024-08-18 13:52 GMT

நாணயத்தில் கருணாநிதி உருவத்துடன் அவர் கையெழுத்திலான ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம் பெற்றுளளது.

2024-08-18 13:40 GMT

கருணாநிதி நூற்றாண்டு 100 ரூபாய் நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ளவர்களை வரவேற்று, தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு உரையாற்றினார்.

2024-08-18 13:36 GMT

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா: தமிழ்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது

மறைந்த தி மு க தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.  

2024-08-18 13:31 GMT

கலைவாணர் அரங்கம் வந்தடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

2024-08-18 13:29 GMT

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலைவாணர் அரங்கத்துக்கு வருகை தந்துள்ளார்.

2024-08-18 13:26 GMT

கருணாநிதி நூற்றாண்டு 100 ரூபாய் நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெறும் இடத்திற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வருகை தந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்