கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு... ... கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா: தமிழ்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது

மறைந்த தி மு க தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.  

Update: 2024-08-18 13:36 GMT

Linked news