வேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் பொறியியல் படிப்புகள் எவை?

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.;

Update:2024-06-17 09:46 IST

Photo Credit: ANI

1. பி.இ. சிவில் இன்ஜினியரிங் (கட்டிடப்பொறியியல்)(B.E. Civil Engineering)

"சிவில்இன்ஜினியரிங்"எனஅழைக்கப்படும்"பொதுப்பொறியியல்"பிரிவில் கட்டிடம் கட்டுதலை உள்ளடக்கிய கட்டுமானப் பணிகள் கற்றுத்தரப்படுகின்றன. இந்தப்பிரிவில் - கட்டிடம்கட்டுதல், கால்வாய்கள் அமைத்தல், அணைகள்கட்டுதல், வடிகால்அமைத்தல், சாலைகள் உருவாக்குதல், நீர்த்தேக்கங்கள், நீர்வழங்கும் அமைப்புகள் உருவாக்குதல், பாலங்கள் அமைத்தல், துறைமுகங்கள் உருவாக்குதல், விமானதளங்கள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு கட்டுமான பணிகளுக்கான கள ஆய்வுகள் வடிவமைப்புகள் கட்டுமானம் பேணுதல், பழுதுபார்த்தல் முதலிய பணிகள் கற்றுத்தரப்படுகின்றன. பி.இ. சிவில்இன்ஜினியரிங் (கட்டிடப்பொறியியல்) படித்தவர்கள் எம்.இ. எனப்படும் மாஸ்டர் ஆஃப் இன்ஜினியரிங், மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி எனப்படும் எம்.டெக். படிப்பிலும் சேர்ந்து மேற்படிப்புபடிக்கலாம்.

2. பி.இ. எந்திரவியல்பொறியியல்(B.E. Mechanical Engineering)

பி.இ."இயந்திரவியல்பொறியியல்"எனஅழைக்கப்படும் "மெக்கானிக்கல் இன்ஜினியரிங்" படிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், எந்திரங்கள், கொதிகலன்கள் மற்றும் மின்உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. இவைதவிர - தேவையானஉபகரணங்களை வடிவமைக்கவும் கற்றுத்தரப்படுகிறது. தற்போது கம்ப்யூட்டர் பற்றிய கல்வியும், அதன் பயன்பாடும் இந்தப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பாரத கனரக மின்சாதன நிறுவனம், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் இப்படிப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புஉள்ளது. இந்தப் படிப்பு தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.

3.பி.இ.மின்னியல்மற்றும்மின்னணுவியல்பொறியியல்(B.E. Electrical and Electronics Engineering)

பி.இ. மின்னியல் மற்றும் மின்னணுவியல் என்னும் பொறியியல் படிப்பில், மின்சாரம் சம்பந்தப்பட்ட இயந்திரங்கள், மின்சார உற்பத்தி அமைப்புகள், மின்ஆற்றலைப் பகிர்தல் ஆகியவை பற்றி கற்றுத்தரப்படுகின்றன. மேலும், ஆற்றல் மின்னணுவியல், கருவிகள் கட்டுப்பாடு அமைப்புகள் போன்றவை பற்றியும் விரிவான விளக்கங்கள் தரப்படுகின்றன. இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு, சிமெண்ட் ஆலைகள், ராணுவ தளவாட நிறுவனம், தேசிய வெப்ப மின் ஆற்றல் நிறுவனம், பாரத கனரக மின்சாதன நிறுவனம் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது. கம்ப்யூட்டர் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். இந்தப்படிப்பும் பல பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன.

4.பி.இ.மின்னணுவியல் மற்றும் செய்தித் தொடர்பு பொறியியல் (B.E. Electronics and Communication Engineering)

பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் என்னும் படிப்பு மின்னணுப் பொறியியல், கம்பி வழி செய்தித் தொடர்பு, செய்தித் தொடர்புமுறை பொறியியல், கண்ணாடி இழை வழி செய்தித் தொடர்பு போன்ற பலபாடங்களை உள்ளடக்கியது ஆகும். இந்தப் படிப்பை தமிழகத்திலுள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் நடத்துகின்றன. இந்தப் படிப்பில் சிறப்பிடம் பெற்றவர்கள் தேசிய விமானவியல் கூடம், தேசியமின்னணுவியல் தொழிலகம், பாரத அணுக்கதிர் ஆராய்ச்சி நிலையம், பாரத மின்னணு தொழிற்சாலை போன்ற பல அமைப்புகளில் வேலை பெற வாய்ப்புள்ளது. இவைதவிர, பலதனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு ஏராளம் உள்ளன.

5.பி.இ. கணிப்பொறி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E. Computer Science and Engineering)

பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்'என்னும் படிப்பில் கம்ப்யூட்டர் அமைப்பு, கட்டளைமொழிகள், கம்ப்யூட்டர்களை வடிவமைத்தல், கம்ப்யூட்டர் வரைபடங்கள் போன்ற பல பாடங்களில் அனுபவக் கல்வி பெறவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பைமுடித்தவர்களுக்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தப்படிப்பு தமிழகத்திலுள்ள பெரும்பாலான பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் உள்ளது. அரசு மற்றும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்களும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவழங்குகின்றன.

6.பி.இ.மின்னணு மற்றும் கருவிநுட்பவியல் (B.E. Electronics and Instrumentation)

பி.இ. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்னும் மின்னணு மற்றும் கருவி நுட்பவியல் படிப்பில், பொருளாதாரம் மற்றும் மேலாண்மை, பொருள் தயாரித்தல், சுற்றுப் புறமாசு கட்டுப்பாடு (Environmental Pollution Control) ஆகிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகளை நீக்கி சுற்றுப் புறத்தை மாசு படாமல் காக்கும் முறையும், வேளாண்மைத் தொழில்களுக்குப் பயன்படும் வகையில் உயிர் மருத்துவம் (Bio Medical), உயிர்வேதியல் (Bio Chemical) முறைகளும்கற்பிக்கப்படுகின்றன.

7. பி.இ. இயந்திரவியல் மின்னணு பொறியியல் (Mechatronics Engineering)

இயந்திரவியல்மற்றும் மின்னணுவியல் ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளும் இணைந்து மின்னியல் படிப்பையும் சேர்த்து புதியப் படிப்பாக இயந்திர மின்னணு(Mechatronics Engineering)பொறியியல்திகழ்கிறது. இந்தப் படிப்பில் கணினி தொழில்நுட்பத்தோடு இயந்திரவியல் பொறியியலை இணைத்து மின்னணுவியல் மூலம் இயந்திரங்களைஇயக்கவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இப்போதெல்லாம் இயந்திர மின்னணு பொறியியல் படித்தவர்களுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.

8. பி.இ. தானியங்கி பொறியியல் (B.E. Automobile Engineering)

போக்குவரத்து வாகனங்கள், வாகனவடிவமைப்பு, வாகனஉற்பத்தி, வாகனபழுதுபார்த்தல், வாகன பராமரிப்பு போன்ற முக்கிய பொறியியல் பாடங்களை உள்ளடக்கிய படிப்பு 'தானியங்கிபொறியியல்'ஆகும். மோட்டார் சைக்கிள், கார்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற எல்லா வாகன தயாரிப்பு நிறுவனங்களிலும் இந்தப்படிப்புபடித்தவர்களுக்குவேலைவாய்ப்புகள்அதிகம்உள்ளன. அரசுத்துறை வேலைவாய்ப்பும் இவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தப் படிப்பை சொந்தமாக, படித்து முடித்தவர்கள் வாகன பராமரிப்பு நிலையங்கள்(Workshop) அமைத்து தொழில் நடத்தலாம்.

9. பி.இ. உலோகவியல் பொறியியல் (Metallurgical Engineering)

பலவித உலோகங்களான அலுமினியம், டைட்டானியம், துத்தநாகம், குரோமியம், நிக்கல் போன்ற உலோகங்களைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்தல், உலோகங்களின் தரத்தை ஆய்வு செய்தல், உலோககலவைகளைதயாரித்தல்போன்றமுக்கியப்பாடங்களைஉள்ளடக்கியப்படிப்பு 'உலோகவியல்பொறியியல்'ஆகும். உருக்காலைகளில்இவர்களுக்குவேலைவாய்ப்புகள்அதிகம்உள்ளன.

10. பி.இ. உணவுத் தொழில் நுட்பம்(B.E. Food Technology)

மனிதர்கள் நாள்தோறும் உணவு சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். பழங்கள், காய்கறிகள், மீன், இறைச்சி,பால் போன்ற பல்வேறு உணவுப்பொருட்களை சரியான முறையில் பாதுகாக்கா விட்டால் அவை விரைவில் கெட்டுப் போய்விடும். எனவே, உணவைப் பதப்படுத்தி பாதுகாக்கும் தொழில் நுட்பத்தை முறைப்படி கற்றுக் கொள்ள உதவும்படிப்பாக 'உணவுதொழில்நுட்பம்' (Food Technology) உதவுகிறது. இவைதவிர, இந்தப் படிப்பில் உணவு உற்பத்தி, உணவு ஏற்றுமதி போன்றவைகளும் கற்றுத் தரப்படுகின்றன. பால்பண்ணைகள், இந்திய உணவுக்கழகம் போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களில் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது.

11. பி.இ. அச்சுத்தொழில்நுட்பம்(B.E., Printing Technology)

பி.இ. பிரிண்டிங்டெக்னாலஜி என்னும் அச்சுத்தொழில் நுட்பப்படிப்பில் - அச்சிடும்முறைகள், அச்சிடத் தேவையான பொருட்கள், அச்சுத்துறையில் கணிப் பொறியின் பங்கு, நிர்வாகமேலாண்மை - முதலிய பாடங்கள் விரிவாகக் கற்றுத்தரப்படுகிறது. இந்தப்படிப்பில் அறிவியல், கணிதம், பேக்கேஜிங்(Packaging), மெட்டீரியல்சயின்ஸ் (Material Science), இயந்திரவியல், மின்சாரவியல் பாடங்களும் கற்றுத்தரப்படுகின்றன. இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்குபெரிய அச்சகங்கள், பத்திரிகைகள், விளம்பரநிறுவனங்கள், அச்சு இயந்திர உற்பத்திநிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளது.

12. பி.இ. வானூர்தி பொறியியல்(B.E. Aeronautical Engineering)

'ஏரோபிளேன்'என அழைக்கப்படும் வானூர்திகளைப் பற்றிய பொறியியல் படிப்பு "ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்"ஆகும். இந்தப் படிப்பில் வானூர்திகளை வடிவமைத்தல், பரிசோதனை செய்தல், கட்டுமானம், விண்கலன்கள் வடிவமைப்பு, ஏவுகலன்கள் வடிவமைப்பு, ராணுவ விமானங்கள் வடிவமைப்பு போன்ற பல பொறியியல் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. விமான நிலையங்களிலும், இந்தியவிமானப்படையிலும், பெரிய விமான நிறுவனங்களிலும் இந்தப்படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக ள்உள்ளன.

13. பி.டெக் நெசவுத் தொழில்நுட்பம்(B.Tech. Textile Technology)

"நெசவுத் தொழில்நுட்பம் "என்பது நூல் தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, சாயம்போடுதல், நூல்களை வெண்ணிறமாக்குதல், மிளிரவைத்தல், செயற்கை இழைகள் தயாரித்தல் போன்ற பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய படிப்புஆகும். பி.டெக் 'டெக்ஸ்டைல்டெக்னாலஜி'என்னும் நெசவுத் தொழில் நுட்பப் பட்டம் பெற்றவர்கள், தேசிய ஜவுளி நிறுவனம் மற்றும் தனியார் அரசு நெசவுத் தொழிற்சாலைகளிலும் வேலை பெறவாய்ப்புகள் அதிகம் உள்ளது.

14. பி.டெக். தோல்தொழில்நுட்பம்(B.Tech Leather Technology)

"தோல்தொழில்நுட்பம் என்பது தோல் உற்பத்தி, காலணிகள் உற்பத்தி, தோல் ஆடைகள் உற்பத்தி, தோல் விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றைப் பற்றியும், தோல் உற்பத்திக்குப் பயன்படும் அறிவியல் பற்றியும் அறிந்து கொள்ள உதவும் படிப்புஆகும். இத்துறையில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தோல் வேதிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தோல்பதனிடும் தொழற்கூடங்கள், தோல் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை பெறவாய்ப்புகள் அதிகம் உள்ளது.

15. பி.டெக்வேதிப்பொறியியல்(B.Tech. Chemical Engineering)

"வேதிப்பொறியியல்"என்பதுபெட்ரோலியம், உரம், சர்க்கரை, மருந்துகள், சாயம், சிமெண்ட், பீங்கான் தயாரிக்கும் நிறுவனங்களை வடிவமைத்தல், இத்தகைய தயாரிப்பு நிறுவனங்களை நிர்மாணித்தல், செயல்படுத்துதல், நிர்வகித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய படிப்பு ஆகும். பி.டெக் 'கெமிக்கல் இன்ஜினியரிங்'படிப்பை முடித்தவர்களுக்குப் பெட்ரோலியம், உரம், சர்க்கரை, மருந்துகள், சாயம், சிமெண்ட், தொழற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்திலும் வேலைவாய்ப்புஉள்ளது.

16. பி.இ. தொழிலியல்பொறியியல்(B.E. Industrial Engineering)

பி.இ.'இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங்'என அழைக்கப்படும்'தொழிலியல்பொறியியல்'படிப்பில் பொருட்களின் உற்பத்திக்குத் துணையாக இருக்கும் விதத்தில் பல்வேறு செயல்களைத் திட்டமிட கற்றுத்தரப்படுகிறது. மேலும், தொழிலாளர்களை நிர்வகிக்கவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மூலப்பொருட்களையும், பணத்தையும் மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தும் முறைகளையும், உள்ளடக்கிய பாடங்களும் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. இந்தத் தொழிலியல் செயல்பாடுகளுக்குக் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் முறையும் இதில்அடங்கியுள்ளது.

தொழிற்சாலையில் பணிபுரியத் தேவையான பணியாளர்களையும், இயந்திரங்களையும் எந்தெந்த வகையில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்ளவும் இந்தப் படிப்பு உதவியாக அமைந்துள்ளது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

17. பி.இ. சுரங்கவியல்பொறியியல்(B.E. Mining Engineering)

பி.இ. 'சுரங்கவியல் பொறியியல்'படிப்பில் சுரங்க எந்திரங்கள், தாதுப் பொருள் தோண்டிஎடுத்தல், சுரங்கமேலாண்மை, சுரங்கவியல் கம்ப்யூட்டர் போன்ற முக்கிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசுத் துறை சுரங்க நிறுவனங்களிலும்,தனியார் சுரங்க நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புஉள்ளது.

18. பி.இ. உற்பத்திப் பொறியியல்(B.E. Production Engineering)

உற்பத்திப் பொறியியல் துறை என்பது இயந்திரவியல் துறையைப் போன்றதே ஆகும். இருப்பினும், தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் உற்பத்திமுறைகள். பொருட்களின் உற்பத்திக்குப் பயன்படும் சாதனங்கள், உற்பத்தி சாதனங்களை ஆராய்ந்து தேர்வு செய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள் போன்றவற்றை இப்படிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர்களால் கட்டுப்படுத்தப்படும் இயந்திரங்கள் பற்றிய பாடங்களும் இப்பிரிவில் உள்ளன. இப்படிப்பை முடித்தவர்களுக்குத் தனியார் மற்றும் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

19. பி.இ. புவித்தகவல் வரைவு (B.E. Geo Informatics)

"புவித் தகவல்வரைவு இயல்"என்னும்பிரிவு பொதுப் பொறியியல் துணையோடு இணைந்த பிரிவுஆகும். இருப்பினும், இந்தியாவில் சில கல்வி நிலையங்களில் மட்டும் இப்பிரிவு உள்ளது. இந்தப் பிரிவில் நிலஅளவை, ஒளிப்படநிலஅளவை, தொலையுணர்வியல், புவித்தகவல் அளவியல், வரைவியல், செயற்கைக்கோள்மூலம் அளவியல், கணிப் பொறிவரைவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வான் வெளித்துறை, நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி, சர்வே ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் பெருநகர் வளர்ச்சிக்குழுமங்கள், குடிநீர்வடிகால்வாரியங்கள், மத்திய மாநில அரசுவழங்கும் வேலைவாய்ப்புகள் போன்றவைகளும் இந்தப் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு அதிகம் உள்ளது.

20. பி.இ. தகவல் தொழில்நுட்பம் (B.E.Information Technology)

இன்றைய உலகில் மிகவும் அதி வேகமாக வளர்ச்சியடைந்து வருவது 'தகவல்தொழில்நுட்பத்துறை'ஆகும். கம்ப்யூட்டர் உதவியுடன் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அனுப்பும்முறை, தகவல் சேகரிப்பு பற்றியும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இன்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தல் போன்றவையும் இப்படிப்பில் இடம்பெறும்.

21. உயிர் மருத்துவப் பொறியியல்(Bio Medical Engineering)

மருத்துவத்துறையில் பொறியியலை இணைத்து மருத்துவ வளர்ச்சிக்குப் பயன்படும் விதத்தில் அமைகின்ற படிப்புதான் "உயிர் மருத்துவப் பொறியியல் (Bio Medical Engineering) ஆகும். உயிரியல் துறையோடு பொறியியல் கோட்பாடுகளை இணைத்து மருத்துவம் சார்ந்த கருவிகளை உருவாக்கவும், புதிய மருத்துவ முறைகளை செயல்படுத்தவும் இந்தப் படிப்பு உதவுகிறது. இந்தப் படிப்பில் இயந்திரவியல், உடலியல், மின்பொறியியல், வேதியியல் பொறியியல், மருந்து பொறியியல் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. மருத்துவ தொழிற்சாலைகளிலும், மருந்து ஆராய்ச்சிஆய்வகங்களிலும் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.

22. பாலிமர் டெக்னாலஜி (Polymer Technology)

பாலிமர்களை வடிவமைக்கவும், பாலிமர் தொடர்புடைய பயோபிசிக்ஸ், பாலிமர் வேதியியல், பாலிமர் அறிவியல் போன்ற பாடங்களை தெளிவாகப் புரிந்து கொள்ளவும் உருவாக்கப் பட்டபடிப்பு "பாலிமர்டெக்னாலஜி"ஆகும். பாலிமர் தொழில்நுட்பம் தற்போது விண்வெளி பொருட்கள் தயாரிக்கவும், வீட்டுக்குத்தேவையான பலவித பொருட்களை உருவாக்கவும் பயன்படுவதால் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது.

23. உயிரி தொழில் நுட்பம்(Bio Technology)

மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் சம்பந்தப்பட்ட உயிரியலைமுறையாகத் தெரிந்து கொண்டு, அது தொடர்பான தொழில் நுட்ப வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் படிப்புதான் "உயிரி தொழில் நுட்பம் (Bio Technology) ஆகும். உயிரினங்களைப் பாதுகாக்க உதவும் பொருட்களை கண்டுபிடிப்பதுதான் இந்தப்படிப்பின்முக்கியநோக்கம்ஆகும்.இந்தப்படிப்பைமுடித்தவர்களுக்கு, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள்,உணவுப் பதப்படுத்தப்படும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன.

24.பி.இ. / பி.டெக். - சைபர்செக்யூரிட்டி

கம்ப்யூட்டர்கள்,தகவல்கள்,இணையதளங்கள்,தகவல் தொடர்பு சாதனங்கள்,மொபைல் சாதனங்கள் மற்றும் இன்டர்நெட்டுக்கு பயன்படும் சர்வர்கள்போன்றவற்றை பழுதாக்கி, தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு உலாவரும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் முறையை "சைபர்செக்யூரிட்டி"என அழைப்பார்கள். இதனை–"எலக்ட்ரானிக் டேட்டா செக்யூரிட்டி"(Electronic Data Security)என்றும், "இன்பர்மேஷன் டெக்னாலஜிப் ரொட்டெக்சன்"(Information Technology Protection)என்றும் குறிப்பிடுவது உண்டு.

"சைபர்செக்யூரிட்டி"என்னும் வார்த்தைகள் பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக,நெட்வொர்க் செக்யூரிட்டி(Network Security), டேட்டாசெக்யூரிட்டி (Data Security),ரெக்கவரி பிளான்ஸ் அண்ட்பிசினஸ் கண்டினியுட்டி(Recovery Plans and Business Continuity),செக்யூரிட்டி டெஸ்டிங் (Security Testing),செக்யூரிட்டி ப்ரொசீஜர்ஸ் (Security Procedures),எண்ட்யூசர்ஸ் லேர்னிங் (End-Users Learning) என்பவை சைபர் செக்யூரிட்டியின் சில முக்கிய பிரிவுகளாகும். கம்ப்யூட்டர் தொடர்புடைய பல்வேறுகருவிகளை தாக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க பல்வேறு புதிய சைபர் செக்யூரிட்டி பிரிவுகளும் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

25.பி.டெக்.-ஆர்ட்டிஃபிஷியல்இன்டெலிஜென்ஸ் மற்றும்டேட்டாசயின்ஸ்(Artificial Intelligence and Data Science)படிப்பு

இப்போதெல்லாம் மிகவும் பிரபலமாக பேசப்படுகின்ற ஒரு புதியபடிப்பாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) என்று அழைக்கப்படும் "செயற்கைநுண்ணறிவு"விளங்குகிறது இந்த செயற்கை நுண்ணறிவு என்பது மெஷின்லேர்னிங் (Machine Learning) என்பதோடு மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது. அதுமட்டுமல்லாமல்,மனிதர்கள் செய்கின்ற அனைத்து செயல்களையும் சாப்ட்வேர் (Software) மூலம் செய்வதற்கான தொழில் நுட்பமாக இதுஅமைகிறது. குறிப்பாக, நியூரல் நெட்வொர்க் (Neural Networks), மிசின்லேர்னிங் (Machine Learning), அல்கரிதம் (Algorithms),ப்ரோக்ராம் லாங்குவேஜ் (Programming Language), டீப்லேர்னிங் (Deep Learning),டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் (Database Management) - போன்ற பல பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய படிப்பாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உள்ளது.

டேட்டாசயின்ஸ் (Data Science) என்பது தேவையான தரவுகளை (Data)பாதுகாப்பது, பாதகாப்பு ததரவுகளை பகுத்தாய்வு செய்து தகவல்களாக மாற்றி சேகரித்து வைப்பது ஆகியவற்றை குறிக்கும் அறிவியலாகும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது வளர்ந்துவருகின்ற ஒரு தொழில் நுட்பமாகும். எந்திரங்களை பயன்படுத்தி மனிதசிந்தனைகளையும், ஆற்றல்களையும் மனிதர்களைப் போலவே செயலாற்றும் திறமையை இயந்திரங்களில் உருவாக்கும் அதிநவீன தொழில்நுட்பமாகும்.ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் தொழில் நுட்பத்தைகற்றவல்லுநர்கள், பலபகுப்பாய்வுகள் செய்வதற்கும்,அதன்அடிப்படையில் முடிவுகள் எடுப்பதற்கும் ,இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்துகிறார்கள்.

தொடரும்..



Tags:    

மேலும் செய்திகள்