மத்திய அரசு ஜவுளித்துறையில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை

மத்திய ஜவுளித் துறையில் காலியாகவுள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2025-01-15 07:22 IST

இந்தியாவின் உற்பத்தி மற்றும் வேலை உருவாக்கத்தில் ஜவுளி மற்றும் ஆடைகள் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண்மையைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இத்துறைதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்போது மத்திய ஜவுளித் துறையில் காலியாகவுள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 49 குரூப் ஏ, பி மற்றும் சி

பணி விவரம் : துணை இயக்குநர் (ஆய்வகம்) 2,உதவி இயக்குநர் (ஆய்வகம்) 4,உதவி இயக்குநர் (EP&QA) 5,புள்ளியியல் அலுவலர் 1,தர உறுதி அலுவலர் (EP&QA) 15 ,தர உறுதி அலுவலர் (ஆய்வகம்) 4,கள அலுவலர் 3,நூலகர் 1,கணக்காளர் 2,ஜூனியர் தர உறுதி அலுவலர் (ஆய்வகம்) 7,ஜூனியர் புலனாய்வாளர் 2,ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் 1,மூத்த புள்ளியியல் உதவியாளர் 1,ஜூனியர் புள்ளியியல் உதவியாளர் 1

கல்வி தகுதி: குறிப்பிட்ட பாடப்பிரிவில் ஏதேனும் பட்டம்/ முதுகலை பட்டம்/ டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது - 25 ஆண்டுகள்,

அதிகபட்ச வயது- 35 ஆண்டுகள்

வயது தளர்வு:

ஒபிசி (OBC)- 3 ஆண்டுகள் எஸ்சி/எஸ்டி (SC/ST)- 5 ஆண்டுகள்

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/texcsep24/ என்ற இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

குரூப் ஏ பதவிகளுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 1500, குரூப் பி&சி பதவிகளுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.1,000 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025

மேலும் விவரங்களுக்கு https://textilescommittee.nic.in/

Tags:    

மேலும் செய்திகள்