தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம்

புவனேஸ்வரில் உள்ள தேசிய அலுமினியம் நிறுவனத்தில்(நால்கோ) உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.;

Update:2025-01-15 09:45 IST

புவனேஸ்வரில் உள்ள தேசிய அலுமினியம் நிறுவனம்(நால்கோ) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயதுவரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்.

மொத்த காலிப்பனியிடங்கள்: 518

பணி விவரம்: ஆய்வகம் - 37 ,ஆபரேட்டர் - 226 ,பிட்டர் - 73 , மெக்கானிக் - 48 HEMM ஆபரேட்டர் - 9 , மைனிங் - 1,மைனிங் மேட் - 15, மோட்டார் மெக்கானிக் - 22 : முதல் உதவியாளர் - 5 : ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் கிரேடு-III -2 : புவியியலாளர் - 4,செவிலியர் Gr-III -7 f : மருந்தாளர் Gr-III - 6

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, டிஎம்எல்டி, பி.எஸ்சி நர்சிங், ஜிஎன்எம், டி.பார்ம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.29,500 70,000

வயதுவரம்பு: 21.1.2025 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: WWW.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.1.2025

மேலும் விவரங்களுக்கு

Tags:    

மேலும் செய்திகள்