பிரெஞ்சு பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு

புதுச்சேரியில் பிரெஞ்சு பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

Update: 2022-06-05 17:22 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் பிரெஞ்சு பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

பிரெஞ்சு பிரதிநிதி

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுக்கு வெளியே வாழும் பிரெஞ்சு குடிமக்கள் தங்கள் பிரதிநிதியை நியமிப்பதற்கான தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 4 ஆயிரத்து 483 பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். அவர்கள் வாக்குச்சீட்டு மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ, இணையதளம் வாயிலாகவோ வாக்களிக்கலாம்.

வாக்குப்பதிவு

இதன் முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று நடந்தது. இதற்காக புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் 2 வாக்குச்சாவடிகளும், சென்னை, காரைக்காலில் தலா ஒரு வாக்குச்சாவடியும் என 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்களின் அடையாள அட்டைகளை காண்பித்து வாக்களித்தனர். முதியவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓட்டுபோட்டதை காண முடிந்தது.

2-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 8 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்