புதுச்சேரி அரசு சார்பில் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் போனஸ்

புதுச்சேரி அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.

Update: 2023-11-09 03:41 GMT

புதுச்சேரி, 

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. அதாவது அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908-ம் தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184-ம் வழங்கப்படும். இந்த போனஸ் தொகையானது யூனியன் பிரதேச ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே அதே அளவிலான போனஸ் வழங்க புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டு, நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த தீபாவளி போனசை அரசிதழ் பதிவு பெறாத அரசு ஊழியர்கள் சுமார் 18 ஆயிரம் பேர், தினக்கூலி ஊழியர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் பெறுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.13 கோடி செலவாகும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் லாபத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.11,000 ஆயிரம் வரை தீபாவளி போனஸாக வழங்கலாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் கருணை தொகை குறைந்தபட்சம்  ரூ.7000 வழங்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்