குழந்தைகள் உள்பட 14 பேருக்கு வாந்தி மயக்கம்

காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் குழந்தைகள் உள்பட 14 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-05-27 14:05 GMT

காரைக்கால்

காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் குழந்தைகள் உள்பட 14 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாந்தி, மயக்கம்

காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்திற்கு உட்பட்டது சுனாமி குடியிருப்பு. இந்த பகுதியில் நேற்று நள்ளிரவு 3 தெருக்களில் வசிக்கும் 3 குழந்தைகள் உள்பட 14 பேருக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்தது

தகவல் அறிந்த மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார், நோய் தடுப்பு அதிகாரி சேகர் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ. திருமுருகன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

குழந்தைகள் உள்பட 14 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து நலவழித்துறை அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வில் இறங்கினர். இதில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், வாந்தி மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

இதையடுத்து காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் செந்தில்குமார் தலைமையில், ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்தனர்.

சுகாதார துறை நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டிற்கு சென்று உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். சுனாமி குடியிருப்புக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் துரிதப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்