திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள்

மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

Update: 2022-11-16 17:26 GMT

புதுச்சேரி

மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

கலா உத்சவ் போட்டிகள்

புதுவை அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் மழை காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் போட்டிகள் நேற்று காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. இதில் புதுவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 299 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

வாய்ப்பாட்டு, இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட மாணவர்கள் நடனம், இசை, வாய்ப்பாட்டு என ஒவ்வொன்றிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

20 பேர் தேர்வு

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாணவன், ஒரு மாணவி என 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பொறுப்பு அதிகாரி மணிவேல் முன்னிலையில் போட்டிகள் நடத்தப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் டிசம்பர் மாதம் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதில் 10 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜனவரி மாதம் புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் அவர்கள் பங்கேற்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்