மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மனஅழுத்தத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-10 18:24 GMT

மூலக்குளம்

புதுச்சேரி மூலக்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி அஞ்சலை (வயது 72). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன் குளியல் அறையில் வழுக்கி விழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டார். மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டு, மருந்து சாப்பிட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்த மூதாட்டி அஞ்சலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்