டெங்கு, சிக்குன் குனியாவை பரப்பும் கொசுக்கள்

பாகூர் பகுதியில் டெங்கு, சிக்குன் குனியாவை பரப்பும் கொசுக்கள் இருப்பதாக மருத்துவ வல்லுனர் குழு கண்டுபிடித்துள்ளது.

Update: 2022-12-02 18:35 GMT

பாகூர்

பாகூர் பகுதியில் டெங்கு, சிக்குன் குனியாவை பரப்பும் கொசுக்கள் இருப்பதாக மருத்துவ வல்லுனர் குழு கண்டுபிடித்துள்ளது.

மருத்துவ குழு

இந்திய ஆராய்ச்சி மருத்துவ நிறுவனம் மற்றும் கோரிமேட்டில் உள்ள வெக்டர் (பூச்சி) தடுப்பு ஆராய்ச்சி மையமும் இணைந்து 7 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்த மருத்துவ வல்லுனர் குழுவினருக்கு பூச்சியியல் ஓசைட் இன் விட்ரோ முதிர்ச்சி ஒருங்கிணைந்த திசையன் மேலாண்மை குறித்த பயிற்சியை அளித்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள மருத்துவ வல்லுனர்களுக்கு கொசு மற்றும் மணல் ஈக்களின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு குறித்த பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சல் அதிகம் பரவிய பாகூர் பகுதியில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டனர். அதன்படி புதுச்சேரி சுகாதாரத்துறை, மலேரியா நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் டாக்டர் வசந்தகுமாரி, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சூர்ய பிரபு, பாகூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஆனந்தவேலு மற்றும் 7 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்த வல்லுனர் குழுவினர் உள்ளிட்ட 35 பேர் கொண்ட 5 மருத்துவ குழுக்கள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கொசுக்கள் கண்டுபிடிப்பு

அப்போது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை நிரூபிக்கவும் மேலும் ஆய்வுக்காக மாதிரிகளை வீடுகளுக்குச் சென்று சேகரித்தனர். சேகரித்த கோசுக்களின் ஆராய்ச்சிக்குபின் கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

டெங்கு, மலேரியா, பைலேரியா, சிக்குன்குனியா, லீஷ்மேனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு தொற்று நோய்களைக் குறைப்பதற்கு ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதியில் டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா யானைக்கால் நோய் ஏற்படுத்தும் கொசுக்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்