சட்டசபை பாதுகாப்பு பணிக்கு ஐ.ஆர்.பி.என். உதவி கமாண்டன்ட் நியமனம்

புதுச்சேரி சட்டசபையின் பாதுகாப்பு அதிகாரியாக ஐ.ஆர்.பி.என். கமாண்டன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-09-07 16:47 GMT

புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையின் பாதுகாப்பு அதிகாரியாக ஐ.ஆர்.பி.என். கமாண்டன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தீக்குளிக்க முயற்சி

புதுவை சட்டசபைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வருகிறார்கள். அவர்களிடம் போலீசார் மற்றும் சட்டசபை காவலர்கள் விசாரணை நடத்திவிட்டு சட்டசபை வளாகத்திற்குள் அனுப்பி வைப்பார்கள்.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் விவசாயி குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து புதுவை சட்டசபைக்கு வருபவர்களை உரிய சோதனை நடத்தி அனுமதிக்குமாறும், தேவையில்லாத நபர்களை யாரும் அனுமதிக்க வேண்டாம் எனவும் போலீசாருக்கும், சட்டசபை காவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

பாதுகாப்பு அதிகாரி

இதற்கிடையே புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் தலைமையில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் புதுவை சட்டசபையில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு 'ரேங்க்' நிகரான அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புதுச்சேரி ஐ.ஆர்.பி.என். உதவி கமாண்டன்ட் செந்தில்முருகன் சட்டசபை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் புதுச்சேரி சட்டசபையில் உதவி கமாண்டன்ட் செந்தில்முருகன் தலைமையில் இன்று சட்டசபை காவலர்கள், ஊர்காவல்படை வீரர்கள் பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்