கடைகளுக்கு அபராதம்
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருபுவனை
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் அதிகாரிகள் இன்று திருபுவனை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு சில கடைகள், ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். நேற்று ஒரே நாளில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆய்வின்போது கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.