இணைய மருத்துவ முறையை தொடங்க நடவடிக்கை

புதுவையில் இணைய மருத்துவ முறையை தொடங்க நடவடிக்கை எடுங்கள் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.

Update: 2023-07-21 16:51 GMT

புதுச்சேரி 

இணைய மருத்துவ முறையை தொடங்க நடவடிக்கை எடுங்கள் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.

சீராய்வு கூட்டம்

புதுவை சுகாதாரத்துறையின் சீராய்வு கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை சார்பு செயலாளர் கந்தன், இயக்குனர் ஸ்ரீராமலு, தலைமை மருந்தக அதிகாரி ரமேஷ், துணை இயக்குனர் ஆனந்தலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது, பிரதமரின் டயாலிசிஸ் திட்டத்தின் செயல்பாடு மற்றும் குஜராத் மாதிரி டயாலிசிஸ் முறையை செயல்படுத்து வதற்கான நடவடிக்கைகள், காசநோய் இல்லா பாரதம் திட்டத்தின் செயல்பாடு, செயற்கை நுண்ணறிவு மருத்துவம் மூலம் இல்லந்தோறும் பரிசோதனைகள் நடத்தி நீரிழிவு நோய், கண்பார்வை மற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளை கண்டறிந்து குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

இணைய மருத்துவம்

ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது பரிசோதனை முறையில் வெற்றிபெற்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு துணையாக தனியார் பங்களிப்புகளை ஈடுபடுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.

இணைய மருத்துவ முறையை புதுச்சேரியில் தொடங்கி சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்