பொது இடத்தில் மது குடித்த 21 பேர் கைது

புதுச்சேரியில் பொது இடத்தில் மது குடித்த 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-08 16:52 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் பொது இடத்தில் மது குடித்த 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொது இடத்தில் மது...

புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் அமர்ந்து மது குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் காலி இடங்களில், மைதானங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். குறிப்பாக புதுவை-கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் இரவு நேரத்தில் திருவிழா கூட்டம் போல குடிமகன்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் உத்தரவின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் நேற்று இரவு ரோடியர் மில் திடலில் சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் அங்கு மது குடித்து கொண்டிருந்த கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இருந்தபோதிலும் மது குடித்த நைனார் மண்டபத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 47), மூலக்குளம் சுரேஷ், தவளக்குப்பம் விஜய் (27) பூமியான்பேட்டை பிரசாத் (33), கோரி தமிழ்வண்ணன் (37) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கைது

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் மது குடித்த வம்பாகீரப்பாளையம் மகேஷ் (26), திப்புராயப்பேட்டை ராமன் (35), கடலூர் ஜெயமுரளி (34), உப்பளம் கலையரசன் (30), நேதாஜி நகர் நவீன் (26), ஒட்டாம்பாளையம் அய்யப்பன் (38), அரியாங்குப்பம் செந்தில் (35) ஆகிய 8 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பாண்டி மெரினா கடற்கரையில் மது அருந்திய ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்த பில்பர்ட் (28), திப்புராயப்பேட்டை வசந்த்ராஜ் (26), திருவண்ணாமலை அக்பர் (23), வைத்திக்குப்பம் ஜெயபால் (30), திருவண்ணாமலை திருநாவுக்கரசு (25), சூர்யா (26), முருகவேல் (27), விக்னேஷ் (23) ஆகிய 8 பேரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்