ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் எடுத்த இளம்பெண்... அடுத்து நடந்த விபரீதம்

ராய்காட்டில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சியில் இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்ய சென்றார்.

Update: 2024-07-18 05:49 GMT

ராய்காட்,

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வதற்காக பல இளைஞர்கள் உயிரை துச்சமாக எண்ணி ரிஸ்க் எடுத்து வருகின்றனர். இதில் சில விபத்துக்கள் ஏற்பட்டு ஒரு சிலர் தங்கள் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு ஆன்வி கம்தார் (27) என்ற இளம்பெண் ஒருவர், அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது நீர்வீழ்ச்சியின் அருகே அவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், ஆறு மணி நேர மீட்புப் பணியைத் தொடர்ந்து ஆன்வி கம்தார் பள்ளத்தாக்கில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். இருந்தபோதும் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை கொண்ட ஆன்வி கம்தார், அவ்வப்போது வெளியிடும் ரீல்ஸ் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது. அவருடையை மரணம், அவரது பாலோவர்ஸ்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்