ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு; விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.;

Update:2025-03-21 13:56 IST
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு; விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் ஷேக் ரஹீம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த மனுவில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த நடிகைகள் சன்னி லியோன், காஜல் அகர்வால், மிமி சக்ரவர்த்தி, தமன்னா உள்ளிட்டோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த பொதுநல மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஏற்கனவே இதுபோன்ற வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து திரும்ப பெற்றுள்ளார் என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்ததோடு, மீண்டும் டெல்லி ஐகோர்ட்டை நாடுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்