புதிய மாற்றங்கள்: முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட இ.பி.எப்.ஓ.
வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் கோருவதற்கான வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.;

புதுடெல்லி,
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதியாக (PF) பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தால் (EPFO) நிர்வகிக்கப்படுகிறது.
ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் புதிய அறிவிப்புகள்
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையம் (EPFO) பல்வேறு முக்கிய மாற்றங்களை கொண்டுவர உள்ளது. குறிப்பாக, வருங்கால வைப்பு நிதியில் இருந்து (PF)பணம் திரும்பப்பெறுதல் தொடர்பான புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட உள்ளன.
60 சதவீதம் வரை ஆட்டோமேட்டிக் செயலாக்கம்
ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் கிளைகளில் பணம் திரும்பப்பெறுதல் கோரிக்கைகள் 60 சதவீதம் வரை ஆட்டோமேட்டிக் முறையில் செயலாக்கம் செய்யப்படுகிறது. இதனால், பணம் திரும்ப பெறும் நேரம் குறைந்து, வேகமான செயல்பாடு உறுதி செய்யப்படுகிறது.
பணம் திரும்ப பெறும் வரம்பு ரூ 1 லட்சமாக உயர்வு
வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் கோருவதற்கான வரம்பு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, பணம் திரும்பப் பெற விரும்பும் ஊழியர்களுக்கு மிகுந்த வசதியாக அமைகிறது.
பணம் திரும்ப பெறும் காரணங்களுக்காக விரைவில் ஆட்டோமேட்டிக் நடைமுறை
வருங்கால வைப்பு நிதியில் இருந்து முக்கிய தேவைகளுக்காக பணம் திரும்ப பெறும் முறையை மிக வேகமாக செயலாக்கம் செய்யப்பட உள்ளது. விரைவில், கீழ்க்கண்ட காரணங்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் (PF) ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் கிளைகளில் இது ஆட்டோமேட்டிக் முறையில் செயல்படும்.
உடல் நலக்குறைவு அல்லது மருத்துவ செலவுகள்
வீடு கட்டுதல் அல்லது வீடு வாங்குதல்
கல்வி செலவுகள் மாணவர்களுக்கு தேவையான உதவிகள்
திருமண செலவுகள் தொடர்பான உதவிகள்
மூன்றே நாளில் கிளைம்கள் செட்டில்மென்ட்
இந்த புதிய நடைமுறையின் மூலம், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் மிகக் குறைவாக இருக்கும். மேலும் வருங்கால வைப்பு நிதி கிளைகள் மூலம் 3 நாட்களில் செட்டில்மென்ட் தீர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகுந்த நன்மை தரும் ஒரு மாற்றமாக அமைகிறது.
ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் மாற்றங்களால் கிடைக்கும் நன்மைகள்
பணம் திரும்ப பெறும் நேரம் குறையும்.
வேலை செய்யும் ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு அதிகரிக்கும்.
மருத்துவ மற்றும் கல்வி செலவுகளுக்காக உதவி கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் இருந்து வசதியான முறையில் பணம் திரும்ப பெறும் முறையில் செய்யப்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் ஊழியர்களுக்கு மிகப் பெரிய நன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.