தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒரு தொழிலாளி உடல் கண்டுபிடிப்பு

தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.;

Update:2025-03-25 13:19 IST
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒரு தொழிலாளி  உடல் கண்டுபிடிப்பு

ஐதராபாத்,

தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் தோமலபென்டா பகுதியருகே அமைந்த சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, கடந்த பிப்ரவரி 22-ந்தேதி திடீரென மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிலர் தப்பியபோதும், 8 தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். 14 கி.மீ. நீள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை ரோபோடிக் தொழில் நுட்பம் உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை இயற்கை பேரிடராக அரசு அறிவித்தது.

கேரளத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் உதவியுடன் நடைபெற்ற சோதனையில் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு தொழிலாளியின் உடல் கடந்த மாதம் 9 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.இந்த நிலையில், ஒரு மாதத்தைக் கடந்தும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் லோடேட்டி தலைமையில் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இன்று அதிகாலை மற்றொரு உடல் காணப்பட்டுள்ளது.

சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த கன்வேயர் பெல்ட்டுக்கு 50 மீட்டர் தொலைவில் ஒருவரின் உடல் காணப்பட்டிருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். உடல் மீட்கப்பட்ட பிறகு மரபணு பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு இறந்தவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்.மேலும், 6 தொழிலாளர்களின் உடலைத் தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றது

Tags:    

மேலும் செய்திகள்