மும்பை விமான நிலையத்தில் 3 நாட்களில் ரூ.1.70 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களில் ரூ.1.70 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.;

Update:2024-10-19 09:19 IST

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள், தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ரூ.1.70 கோடி மதிப்பிலான 2.427 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கென்யா, ஜெட்டா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மும்பைக்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் தங்கத்தை கட்டிகளாகவும், மெழுகு வடிவிலும் கடத்தி வந்துள்ளனர். இதே போல், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.42.14 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்