எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடிக்கு ஆர்டர்- விமானப்படைக்கு 240 என்ஜின் தயாரிக்க ஒப்பந்தம்

எச்.ஏ.எல். நிறுவனத்தின் கோராபுட் ஆலையில் என்ஜின்கள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2024-09-09 18:15 IST

புதுடெல்லி:

இந்திய விமானப்படையின் சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானங்களுக்கு, 240 ஏரோ என்ஜின்களை தயாரித்து வழங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) நிறுவனத்துடன், ராணுவ அமைச்சகம் இன்று ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.26 ஆயிரம் கோடி ஆகும்.

பாதுகாப்பு துறை செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் விஆர் சவுதாரி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஏரோ என்ஜின்கள், ஒடிசாவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தின் கோராபுட் ஆலையில் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி எச்.ஏ.எல். நிறுவனம், ஆண்டுக்கு 30 ஏரோ என்ஜின்களை தயாரித்து வழங்கும். 240 என்ஜின்களையும் சப்ளை செய்ய 8 ஆண்டுகள் ஆகும்.

என்ஜின் உற்பத்திக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் ஆதரவைப் பெற இருப்பதாக எச்.ஏ.எல். தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்