எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் லோக் ஜனசக்தி

எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து லோக் ஜனசக்தி கட்சி மேல்முறையீடு செய்ய உள்ளது.;

Update:2024-08-03 18:33 IST

பாட்னா,

எஸ்.சி. (பட்டியலினத்தவர்கள்), எஸ்.டி. (பழங்குடியினர்) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது.

பட்டியலின, பழங்குடியின பிரிவிலுள்ள பின்தங்கிய சமூகத்தினருக்கு மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் வரவேற்றுள்ளன.

இந்நிலையில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து லோக் ஜனசக்தி கட்சி மேல்முறையீடு செய்ய உள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். பீகாரை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்