தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது

Update: 2024-10-08 02:37 GMT
Live Updates - Page 4
2024-10-08 04:14 GMT

அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்த முதல்-மந்திரி நயப் சிங் சைனி, லத்வா தொகுதியில் முன்னிலை பெற்று உள்ளார்.    

2024-10-08 04:11 GMT

அரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கான முடிவை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதில் கட்சிகள் பெற்ற முன்னிலை விவரம்:  பா.ஜ.க.-25, காங்கிரஸ்-23, ஐ.என்.எல்.டி.-1, சுயேச்சை வேட்பாளர்-1

2024-10-08 03:39 GMT

ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலையில் உள்ளார். 

2024-10-08 03:24 GMT

அரியானா, காஷ்மீரில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, பிரதமர் மோடிக்கு ஜிலேபி அனுப்பி வைப்போம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.

இன்று நாள் முழுவதும் நாங்கள் லட்டு மற்றும் ஜிலேபி ஆகியவற்றை உண்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

2024-10-08 03:17 GMT

அரியானா, காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் லட்டு, ஜிலேபி உள்ளிட்ட இனிப்புகளை வழங்க தொடங்கியுள்ளனர்.

2024-10-08 03:12 GMT

குருகிராம்,

அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த இந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அரியானாவில் 2 முறை ஆட்சியில் நீடித்து வரும் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. காங்கிரசும் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது. இதற்கு முன்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி, முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகளும் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

போலீசாருடன், ராணுவமும் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், அரியானா மற்றும் காஷ்மீரில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதன் முடிவுகள் இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அரியானாவின் கைத்தல் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் ஆதித்யா சுர்ஜேவாலா கூறும்போது, தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்துக்கணிப்பு முடிவில் 60 தொகுதிகளை நாங்கள் வெல்வோம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நாங்கள் 70 தொகுதிகளை கைப்பற்றுவோம். அதில் கைத்தல் தொகுதியும் இருக்கும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்